சிறிலங்கா அமைச்சரின் குற்றச்சாட்டை அமெரிக்கத் தூதரகம் நிராகரிப்பு
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கருத்து வெளியிடுகையில்,
“ஐ.நா பதவியை ஏற்பதற்காக, நேற்று சிறிலங்காவில் இருந்து புறப்பட்டுச் சென்ற, முன்னாள் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
சிறிலங்கா அதிகாரிகளுடனான எமது பேச்சுக்கள் குறித்து அவர்கள் அடிப்படையில் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது பிரதிபலிக்கிறது.
சிறிலங்கா தொடர்பான எமது கொள்கை, அமெரிக்காவின் அரசியல் பொருளாதார முறைக்கேற்பவே கையாளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.