மேலும்

சரியான பாதையிலேயே செல்கிறதாம் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை

GL-Peirisசிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை சரியான பாதையிலேயே செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்படுவது போன்ற கொள்கையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது.

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடி பணிந்தால், ஜெனிவாவில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை சிறிலங்காவினால் இலகுவாகத் தவிர்க்க முடியும்.

சில நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதானது, போருடன் தொடர்புடைய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்பான அழுத்தங்களுக்கு உள்ளாவதையே குறிக்கிறது.

அத்தகைய நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை.

சிறிலங்கா அதிபராலும், அரசாங்கத்தினாலும் எடுக்கப்பட்ட முடிவுகளின் பின்னணியில் உள்ளூர் மக்கள் தான் இருக்கிறார்கள்.

சிறிலங்காவின் பலமான வெளிவிவகாரக் கொள்கையினால் தான், கடைசியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்ட வரப்பட்ட தீர்மானத்தை பல ஆசிய நாடுகளும், ஆபிரிக்க நாடுகள் சிலவும், ஒரு அரேபிய நாடும், எதிர்த்து வாக்களித்தன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *