மேலும்

மகிந்தவைப் பதவியில் இருந்து நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை

e.v.k.s.elangovanசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

‘தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததன் பின்னணியில் இருப்பவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே.

இது நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்ல. சிறிலங்காவில் ஜனநாயகம் அழிந்துவிட்டது.

இத்தகைய சூழலில் அங்கு தமிழர் நலனைப் பாதுகாக்கும் அரசு அமைய வேண்டும்.

அதற்கு, சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசை பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்வதாகாது.

ஏனென்றால், இந்தியா ஒரு வல்லரசு நாடு, இந்தியா போன்ற வல்லரசுக்கு மக்கள் விரோத ஆட்சியை நீக்கும் கடமை இருக்கிறது.

ராஜபக்ச அரசை அகற்றுவது எப்படி என்று நரேந்திர மோடிக்கு நிச்சயமாக தெரியும்.

அவருக்கும் தெரியாவிட்டால், பல்வேறு ஆட்சிகளைத் தூக்கியெறிந்த அனுபவமுள்ள அமெரிக்காவின் உதவியை அவர் பெற்றுக் கொள்ளலாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *