மேலும்

சிறிலங்காவுக்கு தொடர்ந்து ஆயுத விற்பனை – பிரித்தானியா மீது குற்றச்சாட்டு

Sir-John-Stanleyகவலைக்குரிய நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கவலைக்குரிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் பிரித்தானிய அரசாங்கம் நேர்மையற்ற வகையில் செயற்படுவதாக, பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்கான நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான சேர் ஜோன் ஸ்டான்லி குற்றம்சாட்டியுள்ளார்.

மனித உரிமைகள் விவகாரத்தில் திருப்தியற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பான தூய்மையான கொள்கை ஒன்றைக் கடைப்பிடிக்க அமைச்சர்கள் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கவலைக்குரிய நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் சத்தமில்லாமல் தளர்த்தியுள்ளதாகவும், அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், 63.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை கவலைக்குரிய நாடுகளாகப் பட்டியலிடப்பட்ட 28 நாடுகளில், 18 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில், இஸ்ரேல், சவூதி அரேபியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சிறிலங்கா, ரஸ்யா உள்ளிட்ட, வெளிவிவகாரப் பணியகத்தினால் மோசமானதும், பரந்தளவிலானதுமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளாக குற்றம்சாட்டப்படும் நாடுகளும் அடங்கும்.

சிறிலங்காவுக்கு, 8 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுக்கும் அதிகமான பெறுமதியுடைய, ஷொட்கன், தாக்குதல் துப்பாக்கிகள், ரவைகளை ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில், ஆயுதப்படையினர் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டதாகவும், தடுத்து வைத்திருப்போரை சித்திரவதை செய்வதாகவும், ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், நீதித்துறை மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும், பிரித்தானிய நாளிதழான தி கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *