இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் ஆரம்பம்
ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் சிறிலங்கா- இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுக்களில் ஆறாவது கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் சிறிலங்கா- இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுக்களில் ஆறாவது கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபரும், சீன பாதுகாப்பு அமைச்சரும் இணங்கியுள்ளனர் என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிம்ஸ்ரெக் எனப்படும், வங்காள விரிகுடா நாடுகளின், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் கூட்டம் இன்று புதுடெல்லியில் இடம்பெறுகிறது.
சிறிலங்காவின் ஆயுதப்படைகளை மேலும் பலப்படுத்துவதற்கு, தமது நாடு நிபந்தனையற்ற, முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் உறுதியளித்துள்ளார்.
உலகில் அனைத்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும் பொதுவான வர்ணனைச் சொற்பதம் கொண்டு மேலை நாடுகளால் அழைக்கப்படுகிறது, அது தான் மென்மையான அரசுகள் (Fragile States ). தமது சொந்த மக்களுக்கே அடிப்படை அளவிலான சேவையையும் பாதுகாப்பையும் கொடுக்க கூடிய வலிமையற்ற அரசுகளாக அவை காணப்படுவதாலேயே இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.
மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் ரொரன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்தினார்.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.
ஆறு நாட்கள் பயணமாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நேற்று நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவைச் சென்றடைந்தார்.