மேலும்

Archives

போரின் போர்வையில் நடந்த பொதுமக்களின் கொலைகளை பொறுத்துக்கொள்ள முடியாது – சந்திரிகா

போரில் ஈடுபட்ட போர்வையில், அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த எவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால், அவர்கள்  பொறிமுறை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும் என்று  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை

படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள்  நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார்.

மற்றொரு அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

அமெரிக்க கடற்படையின் தரையிறக்க கப்பலான யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கைத் தீவுக்காகப் போட்டி போடும் அமெரிக்கா- சீனா

ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிறிலங்காவில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இந்திய மாக்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்ட இத்துறைமுகத்திற்கு இம்மாதத்தில், இரு வாரங்கள் வரை அமெரிக்க இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

இன்னமும் தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு  

உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.

ரஷ்ய அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அனைத்துலகப் பங்களிப்புக்கு எதிரான சிறிலங்காவின் நிலைப்பாடு- அமெரிக்கா கரிசனை

எந்தவொரு நீதிப்பொறிமுறைகளிலும், அனைத்துலக பங்களிப்புக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத் தரப்பு வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்திய செயிட் அல் ஹுசேன் – பதிலளிக்காது நழுவியது சிறிலங்கா

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கை தொடர்பாக சிறிலங்கா நழுவலான பதிலையே அளித்துள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஏமாற்றம் – பிரதி வெளிவிவகார அமைச்சரின் உரை இடைநிறுத்தம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில், சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது உரையை இடையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விரைவில் கைது

சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.