மேலும்

Archives

ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர் உறுதி

நான் ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி-கெடம்பே மைதானத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேநாள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காலிமுகத்திடலில் குவிந்த மகிந்த ஆதரவாளர்கள் – இருவர் வெயிலுக்கு பலி

காலிமுகத்திடலில் மகிந்த ராஜபக்ச தனது பலத்தைக் காட்டும் வகையில் நடத்திய மிகப் பிரமாண்டமான மேநாள் பேரணியில் பங்கேற்ற இருண்டு பேர் கடும் வெயில் வெப்பத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தனர்.

யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்றார் பேராசிரியர் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அதிபரால் யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கூட்டமைப்பின் பேரணியில் 15 அம்ச மே நாள் பிரகடனம் வெளியீடு

அம்பாறை மாவட்டம்- ஆலையடிவேம்பில் இன்று காலை இடம்பெற்ற தேசியக் கூட்டமைப்பின் மே நாள் பேரணியில் 15 அம்சங்கள் கொண்ட மே நாள் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை களமாகியுள்ள மே நாள்

தொழிலாளர் நாளான மே நாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் நிலையில், சிறிலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் தமது பலத்தை வெளிப்படுத்தும் பிரமாண்ட பேரணிகளை நடத்தவுள்ளன.

கொள்ளுப்பிட்டியில் அமெரிக்காவின் உயர் திறன் கண்காணிப்பு மையம்?

கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா கடற்படை

மன்னார்- முள்ளிக்குளத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா கடற்படை இணங்கியுள்ளது.

கிளிநொச்சியில் மாமனிதர் சிவராம் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

நிலைமாறும் உலகில் இந்தியா – லோகன் பரமசாமி

சிறீலங்காவின் அரசியல் போக்கில் கீழிருந்து மேலாக அரசை மக்கள் ஏற்று கொள்ள வைக்கும் பொறிமுறையை உருவாக்கும் அதேவேளை, மேலிருந்து கீழான பொறிமுறையை உருவாக்கும் பொருட்டு இலகு கடன் வசதி, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் அதிகார கட்டமைப்புகளை அமைக்க வசதி செய்தல், போன்ற திட்டங்களை உருவாக்குவதன் ஊடாக மேலைத்தேய அரசுகள் தமது மூலோபாய மேலாதிக்க நலன்களை பெற்று கொள்ள முனைவதை காண

ஐ.எஸ் தீவிரவாத சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு நடத்த இணக்கம்

தெற்காசியாவில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தவுள்ளன.