மேலும்

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா கடற்படை

mullikulam-land (1)மன்னார்- முள்ளிக்குளத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா கடற்படை இணங்கியுள்ளது.

முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படை தளம் அமைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அங்கிருந்து 2007ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள் பல வாரங்களாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டங்களின் முடிவுகளுக்கு ஏற்ப நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன முள்ளிக்குளத்துக்குச் சென்று பேச்சு நடத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கத்தோலிக்க மதகுருமார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமுள்ள தனியாரின் 100 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி அறிவித்துள்ளார்.

mullikulam-land (1)mullikulam-land (2)

முள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படை முகாமை ஒன்பது மாதங்களுக்குள் வேறு இடத்துக்கு மாற்றிய பின்னர், இந்த தளத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

அதேவேளை, உடனடியாக விடுவிக்கப்படும் காணிகளில் இன்று தொடக்கம் மீள்குடியமர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முள்ளிக்குளம் மக்களுக்கு சிறிலங்கா கடற்படையின் இந்த முடிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *