மேலும்

கிளிநொச்சியில் மாமனிதர் சிவராம் நினைவேந்தல் நிகழ்வு

sivaram-2017 (2)படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார்.

இதையடுத்து, சுடரேற்றல், மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சரின் உரை இடம்பெற்றது.

sivaram-2017 (1)sivaram-2017 (2)sivaram-2017 (3)sivaram-2017 (4)

இந்த நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சி.ரகுராம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரல் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகர் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

இந்த நிழ்வில், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *