மேலும்

Archives

அவசர உதவிப் பொருட்களை வழங்கினார் இஸ்ரேலிய தூதுவர்

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் அவசர உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்று சந்தித்த இஸ்ரேலிய தூதுவர் டானியல் கார்மன் இந்த உதவிப் பொருட்களைக் கையளித்தார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிப்படுத்தக் கோரி பாரிய போராட்டம்

கடத்தப்பட்டும், படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீழ்ந்து நொருங்கிய உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை

வெள்ள மீட்பு நடவடிக்கையின் போது, காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகிய எம்.ஐ.17 உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானோர் தொகை 180 ஆக அதிகரிப்பு

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 109 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு உதவுவதாக அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானிய தூதுவர்கள் வாக்குறுதி

வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா மக்களுக்கு உதவ அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன.

வீட்டின் மீது விழுந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை எம்.ஐ -17 உலங்குவானூர்தி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விமானப்படையின் எம்,ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

சிறிலங்காவில் பலியானோர் தொகை 164 பேராக அதிகரித்தது – மோரா சூறாவளியும் மிரட்டுகிறது

சிறிலங்காவில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

சடலங்களை ஏற்றிச் செல்லும் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவிகள்

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் துருப்புக்காவி கவச வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மறைந்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

சிறிலங்கா அனர்த்தத்தில் பலியானோர் தொகை 146 ஆகியது – 112 பேரைக் காணவில்லை

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)