மேலும்

Archives

இந்தியா அனுப்பிய இரண்டாவது கப்பலும் கொழும்பு வந்தது

சிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இந்தியக் கடற்படையின் இரண்டாவது கப்பல் இன்று மதியம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு இந்தியக் கடற்படை அளித்த கௌரவம்

எழிமலவில் உள்ள இந்தியக் கடற்படை அகடமியில் 338 கடற்படையினர் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.

வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு – 97 பேரைக் காணவில்லை

சிறிலங்காவின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் இறங்கியது இந்தியக் கடற்படை

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் முதன்முதலில் பேச்சு நடத்திய இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற ரவி கருணாநாயக்கவுக்கு சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து முதன்முதலில் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- அவுஸ்ரேலியா இணக்கம்

கடல்வழி ஆட்கடத்தல் மற்றும் கடல்கொள்ளைக்கு எதிராகச் செயற்படுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் முதல் கப்பல் கொழும்பு வந்தது – மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களுடன் முதலாவது இந்திய கடற்படைக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வெள்ள மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி கவச வாகனங்கள்

சிறிலங்காவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரிஆர் துருப்புக்காவி கவசவாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் சிறிலங்கா

சிறிலங்காவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளன.

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்ததால் இந்த நாட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். நான்கு பிள்ளைகளின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா, உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் அதாவது மார்ச் 2009ல் தனது குடும்பம் எவ்வாறான அவலத்தைச் சந்தித்தது என்பதை விபரித்தார்.