மேலும்

Tag Archives: விமான நிலையம்

1.95 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான  திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையம் திறப்பு – பெரும்பகுதி நிலம் சிறிலங்கா விமானப்படையிடம்

மட்டக்களப்பு விமான நிலையம் இன்று சிவில் விமானப் போக்குவரத்துக்காக இன்று திறந்து வைக்கப்பட்ட போதிலும், அதன் பெரும் பகுதி நிலம், சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை, 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.

கொழும்பு துறைமுகத்தில் விமான நிலையம் அமைக்க திட்டம்

கொழும்பு துறைமுகப் பகுதியில் விமான நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை, பெருநகர மற்றும் மேல்மாகாண அபி்விருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.

மூன்று மாதங்களுக்குப் பின் இன்று வழமைக்குத் திரும்புகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுபாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விமான நிலையம் வழமைக்குத் திரும்பவுள்ளது.

மட்டக்களப்பு சிவில் விமான நிலையம் அடுத்த மாதம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான நிலையமாக, அடுத்த மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்

பரந்துபட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், நாளை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனவரி 6 முதல் நாளாந்தம் ஏழரை மணிநேரம் மூடப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

சிறிலங்காவின் பிரதான அனைத்துலக விமான நிலையமான, பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்துச் செயற்பாடுகளும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ளது.

விமானங்களுக்குள் தஞ்சமடைந்த பாம்புகள் – சென்னை விமான நிலையம் திறக்கப்படுவது தாமதம்

பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகருக்கான விமான சேவைகள் வரும் 8ஆம் நாள் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.

நெற்களஞ்சியமாகிறது மத்தல விமான நிலையம்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அவரது சொந்த இடமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.