அமைச்சர் பௌசி தான் சிறிலங்காவின் அடுத்த பிரதமரா?
அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி.
அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, நேற்று அனுராதபுரவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலளிப்பதாக கூறியிருந்த போதிலும், நேற்றைய பரப்புரைக் கூட்டத்தில் அனுபற்றி வாய்திறக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை இன்று அனுராதபுரவில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்தை, இலத்திரனியல் ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடைவிதித்துள்ளார்.
கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை, சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை வெளியிட்ட கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று தெளிவாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான காரணத்தையும் விபரித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரா என்பது தொடர்பில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.