அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த?
சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் ரத்துச் செய்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்துக்குப் பின்னர், ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் மாறி மாறி தாவி பரபரப்பை ஏற்படுத்திய வசந்த சேனநாயக்க நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, மகிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.
ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்கும், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணிக்கும் இடையில், இன்று உயர்மட்டச் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
2016ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் பங்கேற்றதற்காக, 120 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு அமெரிக்கக் குடியுரிமை ஒரு தடையாக இருக்காது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.