மேலும்

மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு

2016ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் பங்கேற்றதற்காக, 120 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பியிருந்த கேள்வி ஒன்றுக்கு, இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா வழங்கிய பதிலிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

2016 ஆம் அண்டு ஐ.நா பொதுச்சைபை அமர்வுகளில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் 60 பெர் கொண்ட குழு பயணம் மேற்கொண்டிருந்தது.

இந்தக் குழுவில் அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள், சிறிலங்கா அதிபரின் பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். என்றும் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார்.

இதற்கு, பெரும் எண்ணிக்கையானவர்களை பெருமளவு செலவிட்டு அழைத்துச் செல்வது தான் நல்லாட்சியா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் நிரோசன் பெரேரா பதிலளிக்கையில்,  இதனை விட  பெரிய குழுவினர் முன்னைய ஆட்சிக்காலத்தில் பங்கேற்றதாகவும், பல மில்லியன் ரூபா அவர்களுக்காக செலவிடப்பட்டதாகவும் கூறினார்.

அப்போது, அந்த தவறுகளைத் திருத்துவதற்காகவே இந்த அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர் என்று  உதய கம்மன்பில பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *