மேலும்

Tag Archives: அரசியலமைப்பு

20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் 36 பிரிவுகளுக்கு பொதுவாக்கெடுப்பு – உச்சநீதிமன்றம்

ஜேவிபியினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு சபை செயலிழந்ததால் புதிய தலைமை நீதியரசரை நியமிப்பதில் சிக்கல்

அரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு

புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை  மேற்கோள்காட்டி,  கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம், முன்னுரிமை- சிறிலங்கா அரசு

தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன் புதிய அரசியலமைப்பு – இந்தியாவிடம் வலியுறுத்திய சம்பந்தன்

மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேயிடம், வலியுறுத்தியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

அரசியலமைப்பு விவகாரக் குழுவில் ஹக்கீம், சமல், விஜித

நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரக் குழுவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய மூன்று உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்

புதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பின் முதல் வரைவு வியாழன்று வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படுகிறது

புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம்  சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐந்து மாத உறக்கத்துக்குப் பின்னர் கூடவுள்ளது வழிநடத்தல் குழு

ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழு அடுத்த மாதம் மீண்டும் கூடவுள்ளது. வழிநடத்தல் குழு உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.