சாதாரண பெரும்பான்மை மூலம் நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யலாம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்தில் அரசியலமைப்புக்கு முரணான எந்த விதிகளும் இல்லை என்றும், சாதாரண பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த பின்னர், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
