மேலும்

Tag Archives: அரசியலமைப்பு

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு புதிய அரசியலமைப்புத் தேவை – இரா.சம்பந்தன்

தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பே தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தி ஹிந்து அங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது – மங்கள சமரவீர

சிறிலங்காவில் நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கு, தற்போதுள்ள அரசியலமைப்பின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியலமைப்பு ஒன்றே அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

20வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அடுத்த ஆண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தல்? – மைத்திரியின் வாக்குறுதியால் சந்தேகம்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான, அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து வெளியானது

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 19வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஏப்ரல் 23இற்குப் பின்னர் திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தல் – ரவி கருணாநாயக்க

தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்படாது என்றும், திட்டமிட்டபடி, ஏப்ரல் 23ம் நாளுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.