மேலும்

அட்மிரல் கரன்னகொடவிடம் 8 மணி நேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எட்டு மணி நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்திய எல்லை அருகே பாக்கு நீரிணையில் படம் பிடித்த சீன அதிகாரிகள் குழு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு, தலைமன்னார் இறங்குதுறைப் பகுதி மற்றும், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிக்க மகிந்த அணி, ஜேவிபி கங்கணம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஜேவிபியும் சூளுரைத்துள்ளன.

‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சீன தயாரிப்பு பொருட்களால் சிறிலங்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – அஜித் பெரேரா

சீனத் தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவுக்கு எந்த பாதுகாப்புக் கரிசனையும் இல்லை என்று சிறிலங்காவின்  டிஜிட்டல் உட்கட்டமைப்பு, மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

மன்னார் புதைகுழி குறித்து இன்னொரு ஆய்வை நடத்த வேண்டும் – சிவமோகன்

மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த மறுக்கும்  சிறிலங்கா இராணுவம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த  சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இயக்க அமைச்சரவை பச்சைக்கொடி

இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து, மத்தல அனைத்துலக விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை பச்சைக்கொடி காண்பித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

சிறிலங்காவுக்கு கடன் வழங்க இழுத்தடிக்கிறது சீனா

சிறிலங்கா அரசாங்கத்துக்கு, முன்னரைப் போன்று இலகுவாகவும் விரைவாகவும், கடன்களை வழங்குவதற்கு சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.