மேலும்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- எதிர்க்கட்சிகள் திட்டம்

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும்,  இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தனது  பணியகத்தின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, மேலதிக நன்மைகளைப் பெற்றார் என்றும், ஆளும்கட்சிக்கு சாதகமாக பக்கச்சார்புடன் செயற்பட்டார் என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,  நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அண்மையில் சபாநாயகர் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *