மேலும்

மதுவரித் திணைக்கள ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி

மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் பிரேமரத்ன நியமிக்கப்படுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளராகப் பதவி வகிக்கும், உதயகுமார பெரேரா, வரும் ஜூலை 10ஆம் திகதி ( நாளை) 60 வயதை எட்டும் நிலையில் ஓய்வுபெறவுள்ளார்.

அவரது இடத்திற்கு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் எம்.பி.என்.ஏ.பிரேதமரத்னவை நியமிப்பதற்கான யோசனையை, நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்க முன்வைத்திருந்தார்.

அதனை சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கங்களில் இருந்தது போலவே, தற்போதைய அரசாங்கத்திலும், ஓய்வுபெற்ற சிறிலங்கா படை அதிகாரிகளின் ஆதிக்கம் அரச நிர்வாக கட்டமைப்புகளில் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *