இந்தியத் தூதுவருடன் நாமல் சந்திப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியா- சிறிலங்கா கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சிறிலங்காவின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் சந்தோஷ் ஜா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜா, இந்த ஆண்டில் ராஜபக்சவினருடன் தொடர் சந்திப்புக்களை நடத்தி வருகிறார்.
இதற்கு முன்னர் அவர், கடந்த ஜனவரி 15மற்றும் மே 10ம் திகதிகளில், நாமல் ராஜபக்சவுடனும், பெப்ரவரி 5 மற்றும், ஏப்ரல் 22ஆம் திகதிகளில், மகிந்த ராஜபக்சவுடனும் தனிப்பட்ட முறையிலான சந்திப்புகளை நடத்தியிருந்தார்.