மலேசியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜூலை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் அவர், கோலாலம்பூரில் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மற்றும் மலேசிய அரசாங்கத்தின் ஏனைய மூத்த அதிகாரிகளுடன் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை முன்னேற்றுவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத், மலேசிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் சம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், மலேசியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் நுழைவிசைவின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய பயணத்தின் போது, அமைச்சர் விஜித ஹேரத், ஆசியான் அமைச்சர்கள் மன்றத்தின் கூட்டத்திலும் கலந்து கொள்வார்.
இதன்போது, அவுஸ்ரேலியா, ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும், தென்கொரியாவின் உதவி அமைச்சருடனும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.