சுதந்திரக் கட்சிக்குள் சிறிசேன நடத்தும் போராட்டம்
உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற தனது பதவியை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற தனது பதவியை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது.
நான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா பெற்றுக்கொண்ட இராஜதந்திர வெற்றி தொடர்பாக சன்ஜ டீ சில்வா ஜயதிலக எழுதிய “Mission Impossible: Geneva” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம் தக்கவைத்திருப்பதற்கான நகர்வுகளில் இந்தியா ஈடுபடுகிறது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா கடல் சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தனது கடல் நடவடிக்கைகளுக்கான வலைப்பின்னலைப் பலப்படுத்தி வருகிறது.
சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டத்தால் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவிற்கு எதிராக – இவர் தூதுவராகக் கடமையாற்றிய பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கொழும்பு திரும்பிய சூழல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி, த ஐலன்ட் நாளிதழில், சிறிலங்காவின் முன்னாள் தூதுவராக பணியாற்றிய பந்து டி சில்வா எழுதியுள்ள குறிப்பு-
பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது. இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில் இவர் ‘ஏடன் வளைகுடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாத்தல்’ என்பது எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான Peace Ark தற்போது தனது ஆறாவது ‘நல்லிணக்கப் பணியை’ அபிவிருத்தியடைந்து வரும் சில நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தப் பணியின் மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை சீனக் கடற்படையின் மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் , கொழும்பிலிருந்து தெற்காக 250 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள அம்பாந்தோட்டையில் சீனாவின் 190 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமா னநிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தை அமைப்பதற்குத் தேவையான மொத்தச் செலவீனத்தின் 90 சதவீதக் கடனை சீனா வழங்கியது.