மேலும்

அமெரிக்காவின் கடல்சார் மூலோபாயம்

eagle-flag-usaகடல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்கா பல்வேறு கடல் சார் நெருக்கடிகளுக்குப் பதிலளித்து வருவதுடன், எமது பாதுகாப்பு அல்லது எமது கூட்டாளி நாடுகளின் நாடுகளின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் எமது எல்லைகளை நெருங்கக்கூடிய பல்வேறு தொலைதூர புவிசார் அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது.

கடல்சார் பாதுகாப்பானது கடல்சார் மூலோபாயம் தேவை என்பதை வலியுறுத்துகிறது. தேசிய வளங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், பாதுகாப்புச் செயற்பாடுகளை நிதி மற்றும் கப்பல் கட்டுமானங்கள் போன்றவற்றுடன் தொடர்புபடுத்துவதற்கான சிறந்த தெரிவுகளை மேற்கொள்வதற்கான மூலோபாயம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்நிலையில் கடல்சார் மூலோபாயம், அதற்கான தெரிவுகள், கொள்கை வகுப்பாளர்களுக்கான  பரிந்துரைகள் தொடர்பாக இங்கு ஆராயப்படுகின்றன.

பல பத்தாண்டுகளாக சவால் விடுக்க முடியாத உலகத் தலைமையின் அதிகாரத்தின் பின்னர், அமெரிக்கா மீண்டும் பாரிய அதிகாரப் போட்டிக்கு முகங்கொடுக்கின்றது. தற்போது அமெரிக்கா சக்தி வாய்ந்த இரு உலக நாடுகளான சீனா மற்றும் ரஸ்யாவுடன் போட்டியிடுகின்றது.

ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னான பூகோள வர்த்தகம், நிதி போன்ற முறைமையின் கீழும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் அதிகளவில் உருவாக்கப்பட்ட ஆட்சி முறைகளின் கட்டுப்பாடுகளை எதிர்த்து நின்றன. இந்த ஆட்சி முறைமையின் மூலம் அமெரிக்காவானது தனது நாட்டின் குடிமக்கள் மற்றும் ஏனைய நாடுகளின் குடிமக்களின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அவற்றை நீடித்து நிலைபெறச் செய்வதற்குமான பணிகளை ஆற்றியுள்ளது.

சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் தமது இராணுவப் படைகளின் தரத்தை மேம்படுத்திய அதேவேளையில் தமது அயல்நாடுகளுடன் மூர்க்கத்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்தன. ரஸ்யா மற்றும் சீனாவின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளால் அமெரிக்கக் கூட்டணி நாடுகள் சில பாதிப்பிற்குள்ளாகின. மேலும், இவ்விரு நாடுகளும் தத்தமது கரையோரங்களிற்கு அப்பால் தூர தேசங்களுக்குச் சொந்தமான கடற்பரப்புக்களில் தமது கடல்சார் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய   தேசிய நலன்களை விரிவுபடுத்துவதிலும் சீனா மற்றும் ரஸ்யா குறியாக உள்ளன.

கடந்த சில பத்தாண்டுகளாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மூலோபாயமானது ஏனைய அதிகாரம் மிக்க நாடுகளுடன் போரிடுவதை நோக்காகக் கொண்டிருக்கவில்லை. பதிலாக, பதிலி மூலம் பிராந்திய பாதுகாப்பை மேலும் வினைத்திறன் மிக்கதாக உருவாக்கக் கூடிய வலுமிக்க நாடுகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வதே அமெரிக்காவின் பிரதான நடவடிக்கையாக உள்ளது.

அதேவேளையில், அமெரிக்காவானது தனது நாட்டிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கக் கூடிய பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதை நோக்காகக் கொண்டு தனது உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுச் செயற்பாடுகளுக்கான மேலதிக வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பணிகளையும் ஆற்றுகின்றது. அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவ நிலைப்பாடானது அச்சுறுத்தப்படாத போது இந்த மூலோபாயம் நியாயமானதாக இருந்தது. ஆனால் தற்போது இது அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருப்பதால் அமெரிக்கா தனது மூலோபாயத்தை மாற்றியமைக்க வேண்டும்.

todd-usa-hambantota (2)

இவ்வாறானதொரு மூலோபாயமானது பாரிய அதிகாரத்துவப் போட்டி நிலவும் உலகில் நீண்ட காலம் நிலைக்காது. குறிப்பாக அதிகாரத்துவ நாடுகள் சமவலுவற்ற நிலையில் இருக்கும் போது இங்கு பலம் என்பது எதிர்க்கப்படுகிறது. சமவலுவற்ற அதிகாரப் பகிர்வானது ஒரு உறுதியற்ற நிலைப்பாடாகும். அமெரிக்கா இவ்வாறான உறுதியற்ற தன்மையை முகாமை செய்யக்கூடியளவிற்கு சிறப்பான முறையில் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. கென்றி கீசிங்கர் உலக நிலைப்பாட்டு எண்ணக்கருவை இரண்டாக வகுத்துள்ளார். அதாவது ஒழுங்குமுறை முறைமையானது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாட்டை வரையறுப்பதுடன், ‘சமவலு அதிகார’ ஏற்பாடானது இவ்வாறான சாசனங்கள் மீறப்படும் போது அதற்குத் தண்டனை அளிக்கும் விதமாக வரையறுக்கப்படுகிறது.

சமவலுச் சக்திகளின் மாறுபடும் போது, அனைத்துலக ஒழுங்கு தொடர்பாக வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நாடுகள் இந்த முறைமையை மீள்வடிவமைப்பதற்கான அதிகாரத்தைப் பெறுகின்றன. நாடுகளுக்கு இடையில் அல்லது கூட்டணி நாடுகளுக்கு இடையிலான அதிகாரத்துவ சமநிலையானது சமமாக இருக்கும் போது இந்த நாடுகளுக்கு இடையிலான எண்ணக்கருக்கள் தொடர்பாக ‘பனிப்போர்’ உருவாகிறது. சமவலுவற்ற முறைமையில், பலமுள்ள தரப்பானது தன்னை எதிர்க்கும் பலம் குறைந்த தரப்புடன் யுத்தம் புரிகின்றது. இதனால் நாடுகள் சமவலுவை சாதகமாகப் பேணுகின்றன  மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான கட்டுப்பாடற்ற போட்டியானது ஐரோப்பாவின் குருதி தோய்ந்த காலப்பகுதியாகக் காணப்படுகிறது.

ஐரோப்பாவின் 18ம் மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் கத்தோலிக்கர்களுக்கும் புரொட்டஸ்தாந்தியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மத சார் யுத்தங்கள் மற்றும் 20ம் நூற்றாண்டில் சர்வதிகார சித்தாந்தவாதிகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தங்கள் போன்றன நாட்டின் சமவலுவற்ற அதிகாரப் பகிர்வு முறைமைகள் தாமாகவே முடிவிற்கு வருவதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் இல்லாததாலும் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பலவந்தப்படுத்தாமையாலும், வன்முறை சர்வசாதாரணமாகியுள்ளது.

இன்றைய அனைத்துலக முறைமையானது சமவலுவற்ற அதிகாரப் பகிர்வு நோக்கி நகர்கிறது. இவ்வாறானதொரு அனைத்துலக சூழலை முகாமை செய்யக்கூடிய அளவிற்கு அமெரிக்கா தற்போது தயார்ப்படுத்தப்படவில்லை. அமெரிக்கர்கள் தமது தேசத்தை உலகின் மிகப் பாரிய அதிகாரத்துவ சக்தி என்கின்ற பாதுகாப்பு மற்றும் செழுமை மிக்க நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமாயின் மூலோபாய ரீதியாக எவ்வாறான காரணிகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதை அமெரிக்கா தயார்ப்படுத்தத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்கா தனது உலகத் தலைமைத்துவ நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

உலக அரங்கில் தமது நாட்டின் இருப்பு பலவீனமடைந்து வருவதைப் பார்ப்பதை அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள் என்பதற்கான எவ்வித சாட்சியமும் இல்லை. அமெரிக்காவின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் பாதுகாப்புவாதக் கொள்கைகளை நோக்கி நகர்ந்துள்ள அதேவேளையில் 2016ல் இடம்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலானது, அமெரிக்கர்களின் நாளாந்தமானது எத்தகைய பூகோளமயமாக்கலுக்கு உட்பட்டுள்ளது என்பது தொடர்பான முக்கிய கேள்விகளை எழுப்பியது. சுதந்திர வர்த்தகம், நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய வெளிநாடுகளுக்கான கடப்பாடுகள் போன்ற விடயங்களில் அமெரிக்கர்களின் கருத்து என்ன என்பது கருத்து வாக்கெடுப்பின் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும், தமது நாடு எத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றது என்பதை அமெரிக்கர்கள் நன்கறிந்துள்ளனர்.

பலமானதொரு இராணுவத்தை நிலையாகக் கட்டியெழுப்புவதன் மூலம் அமெரிக்காவின் உலக அதிகாரத்துவ சக்தி என்கின்ற நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அமெரிக்கர்களின் விருப்பமாகும். இதற்கும் மேலாக, மத்திய வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் விருப்புரிமையற்ற செலவீனமானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற போதிலும் அதிகரித்துள்ள சமூகச் செலவீனங்களுக்குச் சார்பாக தேசிய பாதுகாப்பை அர்ப்பணிக்க விரும்பும் அமெரிக்கர்களை அடையாளம் காண்பதென்பது மிகவும் கடினமானதாகும். உலகத் தலைமைத்துவ இருப்பின் மூலம் அமெரிக்காவின் தேசிய பொருளாதாரம், கூட்டணி நாடுகள், அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கோட்பாட்டை கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக நோக்காகக் கொண்டுள்ள அனைத்துலக ஒழுங்குமுறைமை போன்றன நன்மையைப் பெறுகின்றன.

தமது கையை விட்டு உலகத் தலைமைத்துவ நிலை சென்றுவிட்டால் இதனால் தமது வாழ்வு பாதிக்கப்படும் என்பதை அமெரிக்கர்கள் அறிவார்கள். அமெரிக்காவானது சாதரணமான ஒரு சக்தி வாய்ந்த நாடல்ல என்பதும் இது தனித்துவமான அதிகாரத்துவம் எனவும் அமெரிக்காவின் அனுபவ முரணாகும். அமெரிக்காவானது வேறு நாடுகளுக்கு உதவுவதை அமெரிக்கர்கள் விரும்பாவிட்டாலும் கூட இரண்டு உலக மகா யுத்தங்கள் மற்றும் பனிப்போர் மற்றும் செப்ரெம்பர் 11 இற்கு பின்னா அமெரிக்கா எதிர்நோக்கிய அச்சுறுத்தல்களுக்கு தற்போதும் முகங்கொடுக்க வேண்டியேற்படும். ஆகவே அமெரிக்காவானது தொடர்ந்தும் பாரிய சக்தியாக மிளிர்வதை கொள்கை வகுப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டியுள்ளனர். இதன் மூலம் மட்டுமே இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறும் போதும் அமெரிக்கா தனித்துவமான சக்தியாகச் செயற்பட முடியும்.

USS Blue Ridge -depature

பாரிய அதிகாரத்துவப் போட்டி அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவ இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் பாதுகாப்பதற்கும் அதனை மேலும் மேம்படுத்துவதற்கும் அமெரிக்க அரசியல் தலைவர்கள் மூலோபாய ரீதியாகச் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த மூலோபாயமானது கடல் சார் அதிகாரத்துவம் மற்றும் பூகோள அமைவிட நலன்கள் போன்ற அமெரிக்காவின் தேசிய நலன்களை குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவின் இரண்டு நட்பு நாடுகளுடனும் இது தனது தரை வழி எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் ஏனைய அயல் நாடுகள் மாக்கடல்கள் மூலம் பிரிக்கப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு சாதகமாக உள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அமெரிக்காவானது ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தனது செல்வாக்கை நிலைப்படுத்தி வருகின்றது என்பதற்கு அப்பால் மேற்குலக அரைக்கோளத்தில் அமெரிக்கா தனது உலகத் தலைமை நிலையைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும். அதாவது அமெரிக்காவானது தனது இருப்பிடமான மேற்குலக அரைக்கோளத்தில் தனக்கான தலைமைத்துவ நிலையைப் பலப்படுத்தவில்லை. அதாவது ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அரசியல், இராஜதந்திரம், பொருளாதாரம், இராணுவம் போன்ற பல்வேறு நலன்களை அமெரிக்கா பெற்று வருகிறது. இந்த நலன்களைப் பாதுகாப்பதும் இவற்றை நிலைத்திருக்கச் செய்வதும் அமெரிக்கக் கோட்பாட்டின் முன்னுரிமையாகத் தொடர்ந்தும் இருக்க வேண்டும். இதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கு கடல்சார் மூலோபாயமானது மிகவும் காத்திரமான ஒரு கருவியாகும். கடல் சார் மூலோபாயம் என்பது பாரிய மூலோபாயத்தின் உபபகுதியாகும்.

இவ்விரு மூலோபயங்களுக்கும் இடையிலான சிறந்த தொடர்பு தொடர்பாக கடற்படை போர்க் கல்லூரியின் பேராசிரியர் ஜோன் பி.ஹற்றன்டோர்பால் வரையறுக்கப்பட்டுள்ளது:

உலகின் சக்தி மிக்க கடற்படை அதிகாரத்தைக் கொண்ட அமெரிக்காவின் அணுகுமுறையானது ஒத்திசைவான கடல்சார் மூலோபாயமாக மேலும் விரிவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். பாரிய அதிகாரத்துவப் போட்டி மீண்டும் எழும்போது இது மிகவும் அவசியமானதாகும். அமெரிக்காவின் தற்போதைய கடல்சார் மூலோபாயமானது ஒத்திசைவானதாக இல்லை என்பது கெட்டவாய்ப்பாகும். பாரிய அதிகாரத்துவப் போட்டியை முகங்கொடுப்பதற்கு உகந்த முறையில் இந்த மூலோபாயம் உருவாக்கப்படவில்லை. பாரிய அதிகாரத்துவ யுத்தத்தில் பங்குகொள்ளும் மரபுசார் படைகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் நோக்கங்களையும் இந்த மூலோபாயமானது அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

மிகவும் துணிச்சலுடன் செயற்படும் கடற்படை வீரர்களுக்கு உத்வேகத்தை வழங்கும் மூலோபாயமாகவும் இது காணப்படவில்லை. அத்துடன்  அமெரிக்கக் கடற்படையின் கட்டமைப்பானது மிகவும் சிறியதாகவும் தேவையான உபகரணங்களையும் கொண்டிருக்கவில்லை. பூகோள அமைவிட முக்கியத்துவம் மிக்க நாடுகளுடன் அமெரிக்காவானது போதியளவு கடல்சார் கூட்டுச் செயற்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை. மிகப் பொருத்தமான மூலோபாயத்தை உருவாக்கக் கூடிய கடல்சார் தொழில்துறைத் தளம் ஒன்றை உருவாக்குவதற்கான முதலீட்டை இடவேண்டிய தேவையை அமெரிக்கா கொண்டுள்ள போதிலும் இது தொடர்பில் அமெரிக்கா அமைதி காத்து வருகிறது.

சுதந்திர உலகின் தலைமை மற்றும் உலகின் முதன்மை மிக்க அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்திமிக்க நாடு என்ற வகையில் அமெரிக்கா தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எத்தகைய கடல்சார் மூலோபாயத்தை உள்ளடக்கிய பாரிய மூலோபாயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறானதொரு மூலோபாயமானது புதிப்பிக்கப்பட்ட பாரிய அதிகாரத்துவப் போட்டிக்கு முகங்கொடுக்கும் பல்வேறு தலைமைத்துவப் பதவிநிலைகளைப் பாதுகாப்பதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்குமான மூலோபாயம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறான மூலோபாயமானது ‘பனிப்போர்’ மூலோபாயத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டதாக எவரும் கருதினாலும் கூட இது தொடர்பில் அமெரிக்கா பின்நிற்கக்கூடாது.

சோவியத் ஒன்றியம் உடையும் ஆபத்தைச் சந்தித்த போது அமெரிக்காவானது பல பத்தாண்டுகளாக ஒத்திசைவான மூலோபாய நாடாகச் செயற்பட்டது. இதேபோன்றே ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தக, பிராந்திய அதிகாரத்திலும் பூகோள ஒழுங்கை உருவாக்குவதற்கான நடவடிக்கைளிலும் ஈடுபடும் இந்த வேளையில் இவற்றை முறியடிப்பதற்கு அமெரிக்கா சோவியத் ஒன்றிய உடைவின் போது கடைப்பிடித்த ஒத்திசைவான மூலோபாய அணுகுமுறையைத் தற்போதும் செயற்படுத்த வேண்டும். கடல்சார் பாரிய மூலோபாயம் ஒன்றை அமெரிக்கா உருவாக்குமாயின் இதன் மூலம் இது தனது பாரம்பரிய அணுகுமுறையான ‘முடிவுகள், வழிமுறைகள், கருத்துக்கள்’ என்பதை சமன் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என சிலர் நினைக்கலாம்.

இந்த அணுகுமுறையானது பொதுவாக இராணுவ மற்றும் நடவடிக்கை சார் மூலோபாயத்திற்கே பொருத்தமானதாகும். மிகவும் முக்கிய காரணத்திற்காக உருவாக்கப்படும் பாரிய மூலோபாயத்திற்கு இது பொருத்தமற்றதாகும். இப்பாரிய மூலோபாயத்தில் பல துணை மூலோபாயங்களை உள்ளடக்க முடியும். அதாவது பாரிய மூலோபாயமானது மீள்ஒதுக்கங்கள், மீள்சீரமைப்புக்கள், மீள்நோக்குகள் போன்ற பல்வேறு துணை மூலோபாயங்களைக் கொண்டிருக்க முடியும்.

இராணுவ மூலோபாயம் என்பது இதனை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு குறித்த வள மட்டம் உள்ளது என்பதில் ஆரம்பிக்கின்றது. ஆனால் பாரிய மூலோபாயமானது சில நாடுகளின் வெளியீட்டுத் திறனுடன் ஆரம்பிக்கின்றது. இதன் பின்னர் இந்த மூலோபாயமானது எவ்வாறு மூலோபாய இலக்குகளை அடைவதற்கு மிகவும் வினைத்திறன் மிக்கவகையில் ஒதுக்கப்பட முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்காவின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அமெரிக்காவின் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுவதை விட மூலோபாய மறுசீரமைப்பு என்பது மிகவும் நம்பகமான ஒன்றாக இருக்கவில்லை. அணுவாயுத விரிவாக்க அச்சுறுத்தலால் பாரிய அளவிலான மரபுசார் தாக்குதலிலிருந்து சோவியத் யூனியனைத் தடுத்து நிறுத்துவதற்கு கைக்கொள்ளப்பட்ட பனிப்போர்க் கால அணுகுமுறையை மீளவும் ஆராயவேண்டியது முக்கியமானதாகும். ஆகவே அணுவாயுத யுத்தத்தை தடுப்பதற்கு மரபுசார் யுத்தத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அமெரிக்காவின் இராணுவ சக்தியானது அணுவாயுத அல்லது கடற்படை அதிகாரத்தை விட அதிக வலுவுள்ள மரபுசார் யுத்தம் ஒன்றைத் தடுப்பதற்கான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே எவ்வித தாமதமுமின்றி அமெரிக்காவின் இராணுவ வலுவானது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். உலகெங்கும் அமெரிக்காவின் இராணுவ வலு பலப்படுத்தப்பட்டால் மட்டுமே ரஸ்யா மற்றும் சீனாவால் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களைத் தடுக்க முடியும். அமெரிக்காவின் அரசியல் தலைமையானது இராணுவப் பலம் மற்றும் பொருளாதாரம் பலம் மற்றும் இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான பல்வேறு நலன்களையும் ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கும் பொதுமக்களின் ஆதரவைக் கட்டியெழுப்புவதற்குமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அமெரிக்காவின் டொலர் நாணயம் உலகின் பயன்பாட்டு நாணயமாக உள்ளதால் இது அமெரிக்கர்கள் பாரிய நலனைக் கொடுக்கிறது. அமெரிக்காவின் பலம் மற்றும் இதன் அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய செல்வாக்கு போன்றன அமெரிக்காவுக்கு நலன் பயக்குகிறது. அத்துடன் அமெரிக்கக் கடற்படைச் சக்தியின் உத்தரவாதத்துடன் கடல்களைத் தாண்டி அமெரிக்காவின் துறைமுகங்களை அடையும் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அமெரிக்காவிலுள்ள நுகர்வோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகின்றனர்.

அமெரிக்காவின் கடல்சார் பாரிய மூலோபாயமானது அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகள் மற்றும் உறவுகளை மீளவும் மதிப்பீடு செய்வதை உள்ளடக்க வேண்டும். குறிப்பாக பூகோள-மூலோபாய பாதிப்பை அடையாளம் காண்பதற்கும் அதனை முறியடிப்பதற்குமான வழிமுறைகளை உள்ளடக்க வேண்டும். உலக வர்த்தகப் பாதைகள், கடல்வழிப் பாதைகள், கடல்சார் முக்கிய மையங்கள் போன்றன அமெரிக்காவின் இராஜதந்திரம் மற்றும் அனைத்துலக உறவுகள் போன்றவற்றில் முக்கிய பங்குகளை ஆற்றவேண்டும்.

வழிமூலம்       – ceylon today
ஆங்கிலத்தில் – Seth Cropsey and Bryan McGrath
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *