மேலும்

பிரிவு: செய்திகள்

நிஸ்ஸங்க சேனாதிபதியை சந்திக்கவில்லை – மறுக்கிறார் அமைச்சர்

மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியை தனது அமைச்சில் சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மறுத்துள்ளார்.

பிள்ளையானின் வாகன ஓட்டுநர் கைது

சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் வாகன ஓட்டுநரான ஜெயந்தன் என்பரை மட்டக்களப்பு -வாழைச்சேனையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வைக்க நாடாளுமன்றில் பிரேரணை

சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இன, மத அடையாளங்களை, தமது பெயர்களில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையிலான, தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான அரசிதழ் வெளியீடு

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தையும், அந்தச் சட்டம் தொடர்பான பிற விதிமுறைகளையும் ரத்து செய்வதற்கான சட்டமூலம்  அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய தடைகள் – இன்னமும் ஆராயாத அமைச்சரவை குழு

சிறிலங்காவின் மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் கருணா மீது தடைகளை விதிக்க பிரித்தானியா  எடுத்த முடிவு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட  அமைச்சரவை குழு, இன்னமும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை. 

இந்தியாவுடன் தரைவழி இணைப்பு குறித்து பேச மறுத்த சிறிலங்கா ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்களின் போது, இந்தியாவுடன் தரைவழி இணைப்புத் திட்டத்தைப் பரிசீலிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்கள் ‘விசுவாசத்தின் நாயகர்களாக’ அறிவிப்பு

சிறிலங்காவில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில், தேவாலயங்களில் உயிரிழந்தவர்கள், ‘விசுவாசத்தின் நாயகர்களாக’ (Heroes of Faith) அறிவிக்கப்படவுள்ளனர்.

பின்கதவு வழியாக ‘குவாட்’டுக்குள்  இழுக்கப்படுகிறது சிறிலங்கா

அண்மையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிள்ளையானை கூண்டுக்குள் அனுப்பிய அருண் ஹேமச்சந்திரா?

வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா செல்கிறது சிறிலங்காவின் உயர்நிலைக் குழு

அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதிகளுடன் நேரடியான பேச்சுக்களை  நடத்துவதற்கு சிறிலங்காவின் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.