அமெரிக்கா செல்கிறது சிறிலங்காவின் உயர்நிலைக் குழு
அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதிகளுடன் நேரடியான பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்காவின் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவின் ஏற்றுமதிகள் மீது 44 சதவீத வரியை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருப்பது, சிறிலங்காவின் ஏற்றுமதித் தொழில்துறைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகளுடனான தொடர்ச்சியான மெய்நிகர் சந்திப்புகள் மற்றும் சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையை அச்சுறுத்தும் நெருக்கடி குறித்த விரிவான மதிப்பீடுகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இந்த பயணத்தை உறுதிப்படுத்தினார்.
எனினும், அமெரிக்கா செல்லவுள்ள குழுவிலட் இடம்பெறவுள்ளவர்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் குழு எங்கள் கவலைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் நேரடியாக முன்வைத்து, சிறிலங்காவின் ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார உறுதித்தன்மையை முன்னிறுத்துவதற்கான ஒரு பாதையைக் கண்டறியும் என்றும் அவர் கூறினார்.