நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான அரசிதழ் வெளியீடு
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தையும், அந்தச் சட்டம் தொடர்பான பிற விதிமுறைகளையும் ரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டம், 2024 ஜனவரி 24 ஆம் திகதி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
எனினும் இது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக ஆராய்வதற்கான குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செயவதற்கான சட்டமூலம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்கவினால் தனிநபர் பிரேணையாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், குறித்த சட்டம் முழுமையாக ரத்துச் செய்யப்படும்.