பிள்ளையானின் வாகன ஓட்டுநர் கைது
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் வாகன ஓட்டுநரான ஜெயந்தன் என்பரை மட்டக்களப்பு -வாழைச்சேனையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்றுக்காலையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட ஜெயந்தன், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த 8 ஆம் திகதி பிள்ளையான் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே அவரது வாகன ஓட்டுநர் ஜெயந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் தன்னிச்சையாக முன்னிலையாகவிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருந்த நிலையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.