மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்காவுக்கு சாதகமாக செயற்படும் அமெரிக்கா?

சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா சில சாதகமான நகர்வுகளை மேற்கொள்ளக் கூடும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மேரி ஹாப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

கனேடிய இராணுவ, காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளை அச்சுறுத்திய இலங்கைத் தமிழர் கைது

கனடாவின் அரசாங்க, இராணுவ, காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல்களை விடுத்து வந்த ரொரன்ரோவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவரை கனேடிய காவல்துறை கைது செய்துள்ளது.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்தது மக்களின் ஆணைக்கு எதிரானது – இரா.சம்பந்தன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே, கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய அரசுக்கு உதவத் தயார் – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இன்னும் வெளிப்படையான, ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.

ரணில் மீண்டும் குத்துக்கரணம் – இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லையாம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக இன்னமும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எக்காரணம் கொண்டும் வடக்கில் படைக்குறைப்பு நடக்காது – படையினருக்கு வாக்குறுதி

வடக்கில் இருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்காப் படையினரைக் குறைக்கப் போவதில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.

கிழக்கு முதலமைச்சராக ஹபிஸ் நசீர் பதவியேற்பு – அம்பாறையில் கடும் எதிர்ப்பு.

கிழக்கு மாகாணசபையின்  புதிய முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹபிஸ் நசீர் அகமத் இன்று  மாலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மைத்திரியின் இந்தியப் பயணம் உறுதி – வரும் 15ம் நாள் புதுடெல்லி செல்கிறார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு வரும் 15ம் நாள் இந்தியா செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகமும், இந்திய வெளிவிவகார அமைச்சும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடாதாம் சீனா

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவோ, இன்னொரு நாட்டுக்கு எதிராக சிறிலங்காவைப் பயன்படுத்தவோமாட்டது என்று சீனா உறுதியளித்துள்ளது.

சீனாவிடம் பணிந்தது மைத்திரி அரசு – கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கு அனுமதி

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம், சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துக்கு  அனுமதி அளித்துள்ளது.