சீனாவின் திட்டத்துக்கு சிறிலங்காவில் வலுக்கிறது எதிர்ப்பு
சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு சிறிலங்காவில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது.
சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு சிறிலங்காவில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது.
தாம் வெற்றி பெற்றால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் எவரையும் முன்னிறுத்த அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரை பகிரங்கமான நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்த சவாலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, உயர் பெறுமான இலக்குகளை (High Value Target) படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
பாப்பரசர் எமது இடத்துக்கு வந்து, எம்முடன் இணைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்றும், வடக்கிலுள்ள தமிழர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவில் அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு வழங்கமாட்டார் என்றும், ஆனால், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளைப் பலப்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நியாயமான, நீதியான தேர்தல் நடத்தப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு, அரசாங்க வளங்களை மட்டுமன்றி சிறைச்சாலையில் உள்ள கைதிகளையும் பயன்படுத்தி வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.
2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.