மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

வொசிங்டன் பொங்கல் விழாவில் நிஷா பிஸ்வால் – சிறிலங்கா தூதுவருடன் முக்கிய பேச்சு

வொசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கலந்து கொள்ளவுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம்

சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யோசிதவை கடற்படையில் இருந்து விலக்கி விட்டே பதவியைத் துறந்தார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தான் அலரி மாளிகையை விட்டு வெளியேற முன்னதாக, தனது இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவை சிறிலங்கா கடற்படையை விட்டு விலக அனுமதிக்கும் ஆவணங்களில் ஒப்பமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாப்பரசர் வருகையின் போது சிறிலங்காவில் நிகழ்ந்த 3 ஆட்சி மாற்றங்கள்

பாப்பரசர்கள் பயணம் மேற்கொண்ட தருணங்களில், சிறிலங்காவில் மூன்றுமுறை ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஒரு விநோதமான விடயம் என்று ஊடகங்கள் விபரித்துள்ளன.

போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள்

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், 1.71 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாகவும், புகலிடம் கோருவாராகவும், உள்நாட்டு அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

வரும் 18ம் நாள் புதுடெல்லி செல்கிறார் மங்கள சமரவீர – வேகமெடுக்கும் உறவு

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று வரும் 18ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார்.

போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து மைத்திரியுடன் பான் கீ மூன் பேச்சு

சிறிலங்காவின் போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று காலை கொழும்பு வருகிறார் பாப்பரசர்

பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இன்று காலை சிறிலங்காவுக்குப்  பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கு சிறிலங்காவில் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகிந்தவை படுகுழியில் தள்ளியவரும் சிங்கப்பூருக்கு பயணம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவரான, அவரது சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நள்ளிரவு சதித்திட்டம் – மகிந்த, கோத்தா மீது விரைவில் விசாரணை

அதிபர் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்து விட்டுத் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட சதித்திட்டம் குறித்து, புதிய அரசாங்கம் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.