ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு
சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது.
அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் தன்னுடன் அழைத்திருந்த, சம்பந்தமில்லாத வெளியாட்களுமே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மீது, ஈபிடிபியினர் மேற்கொண்ட தாக்குதலில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிந்த பின்னர், இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை தாமே வடக்கு மாகாணசபையில் முன்மொழிந்து விவாதிக்க ஏற்பாடு செய்வதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், வயது குறைந்த சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படும் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக, யாழ்.போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இருந்த சில அமைச்சுப் பொறுப்புகள், மாகாண அமைச்சரவையில் உள்ள ஏனைய மூன்று அமைச்சர்களிடம் இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சிறிலங்காவின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் உறவினர்கள் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலும் – அமைச்சரவைப் பொறுப்புக்களில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பேசப்படுகின்ற நிலையிலும் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது.