மேலும்

350 மில்லியன் டொலர் கடன் குறித்து சிறிலங்கா- இந்தியா இடையே உடன்பாடு

டிட்வா புயலுக்குப் பின்னர், இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்பு உதவித்  தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் டொலர் கடன் வசதிகள் குறித்து சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இன்று உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இன்று காலை கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

புயலுக்குப் பின்னரான புனரமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கொள்முதல் தேவைகளுக்கு இந்த உடன்பாடுகள் ஆதரவளிக்கும்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​சிறிலங்காவில்,  இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களையும் இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர்.

மேலும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *