22க்கு எதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க முன்மொழியும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துவார்.
இதையடுத்து, 22வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்ரெம்பர் 24 மற்றும் 25 ஆம் நாள்களில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அதேவேளை, ஊழல் ஒழிப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
