மேலும்

சிட்னியில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுத் தூபி திறப்பு

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுத் தூபி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park இல், Cumberland நகர சபையின் ஆதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.

இன்று காலை 9.45 மணியளவில், இடம்பெற்ற நிகழ்வில், Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுத் தூபியை  திறந்து வைத்தார்.

சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிட்னியில் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஒத்துழைப்போடும் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அவுஸ்ரேலிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *