மேலும்

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய கோட்டாவின் ரிட் மனு தள்ளுபடி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதையும், தடுத்து வைப்பதையும் தடுக்கும்படி கோரி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும்படி கோட்டாபய ராஜபக்ச கோரியிருந்தார்.

இந்த மனு பரிசீலனையில் இருக்கும்போது, ​​கைது நடவடிக்கையிலிருந்து இடைக்காலப் பாதுகாப்பையும் அவர் கேட்டிருந்தார்.

இந்த மனுவை நீதியரசர்கள் ரோஹந்த அபேசூரிய மற்றும்  சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்  அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *