மேலும்

ரில்வின் சில்வாவுடன் ஜெய்சங்கர், நிதின் நபின் சந்திப்பு

இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி உயர்மட்டக் குழுவினர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

புதுடெல்லியில் இன்று காலை நடந்த இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நம்பிக்கையான பங்காளர் என்ற வகையில் சிறிலங்காவின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் இந்தியா எப்போதும் ஆதரவு வழங்கும் என்றும்  ஜெய்சங்கர், எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தியப் பயணத்தின் இறுதி நாளான இன்று ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இன்று பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *