விரைவில் கொழும்பு வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயண நாள் இன்னமும் அறிவிக்கப்படாத போதும், அதற்கான ஒழுங்குபடுத்தல்களில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் ஈடுபட்டுள்ளன.
நேற்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயண ஒழுங்குகள், மற்றும் இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புகளில் இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் துணைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 2023ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இரண்டு நாள் பயணமாக கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த போதும், கடைசி நேரத்தில் காரணம் கூறப்படாமல் அந்தப் பயணம் ரத்துச் செய்யப்பட்டது,
