மேலும்

கொழும்பு அருகே கடலில் மூழ்கிய சிறிலங்கா கடற்படையின் டோறா படகு

மொரட்டுவவில் உள்ள அகுலான கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று முற்பகல் 11.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. படகு கவிழ்ந்தபோது அதில் 12 சிறிலங்கா கடற்படையினர் இருந்துள்ளனர்.

கடலில் ரோந்துப் பணியை முடித்துக் கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள், விபத்து நடந்ததை உடனடியாக உணர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்குலான பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்  தங்கள் படகுகளில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற து, பாதுகாப்பு கவச உடை அணிந்த கடற்படையினர் தண்ணீரில் மிதப்பதை  கண்டு மீட்டுள்ளனர்.

விபத்து குறித்து அறிந்ததும், அங்குலான காவல்துறை, கடற்படை மற்றும் விமானப்படை உடனடியாகத்  மீட்புப் பணிகளைத் தொடங்கிய நிலையில், 12 கடற்படையினரில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மீட்கப்பட்ட 11 கடற்படையினரில் 8 பேர் சிகிச்சைக்காக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் களுபோவில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூழ்கிய படகில் இருந்து காணாமல் போன கடற்படை மாலுமியை தேடுவதற்காக, சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ- 17, பெல்- 412உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி  தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *