சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு 354 ரூபாவைத் தாண்டியது
சிறிலங்கா மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி, 354 ரூபாவைத் தாண்டியுள்ளது.
கடந்த பல நாட்களாக சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில் இன்று, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி, ரூ. 354.03 ஆகவும், கொள்வனவு விலை ரூ. 342.63 ஆகவும் உள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 342.70 ஆகவும், வாங்கும் விலை ரூ. 332.23 ஆகவும் இருந்தது.
இன்று ஒரே நாளில், விற்பனைப் பெறுமதி சுமார் 12 ரூபாவினாலும் கொள்வனவுப் பெறுமதி, 10 ரூபாவினாலும் உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நிலவி வரும் மத்திய கிழக்கு பதற்றங்கள் உள்ளிட்ட உலகளாவிய சந்தை அழுத்தங்களுக்கு மத்தியில், அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது.
