மேலும்

குருநாகல் சிறுவன் வயிற்றில் உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு

உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு ( monkey tapeworm) சிறிலங்காவைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுரங்க துலமுன்ன தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனின் வயிற்றில் இருந்தே இந்த குரங்கு நாடாப் புழு அகற்றப்பட்டுள்ளது.

அரிய வகையான குரங்கு நாடாப்புழு பற்றிய விவரங்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளிச்சத்திற்கு வந்தது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட பல மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, இந்த நாடாப்புழு அடையாளம் காணப்பட்டது.

இந்த மாதிரிகளை பகுப்பாய்வு செய்தபோது, உலகில் ​​அறியப்பட்ட மிக நீளமான குரங்கு நாடாப்புழு இது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

நாடாப்புழு முட்டைகளை நுண்நோக்கி மூலம் பரிசோதித்ததில் அவை பெர்டியல்லா (Bertiella) இனத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது.

பொதுவாக, இந்த வகை நாடாப்புழு 70 செ.மீ நீளம் வரை வளரும்.

இதுவரை, உலகில் பதிவு செய்யப்பட்ட மிக நீளமான பெர்டியல்லா நாடாப்புழு 40 செ.மீ. ஆகும்.

இருப்பினும், குருநாகலைச் சேர்ந்த சிறுவனின் வயிற்றில் காணப்பட்ட நாடாப்புழு 70 செ.மீ. வரை காணப்பட்டது.

இந்த நாடாப்புழு சிறிலங்காவில் மட்டுமே காணப்படும் ஒரு தனித்துவமான வகையா என்பதை தீர்மானிக்க மரபணு சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெர்டியல்லா நாடாப்புழுக்கள் கடந்த காலங்களில் சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது போல  நீளமானதாக இருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *