அடுத்தமாதம் ஜெர்மனிக்குப் பயணமாகிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் ஜேர்மனிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜூன் 10ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ஜெர்மனிக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் உயர்மட்ட அரசஅதிகாரிகளும் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
கடந்த செப்ரெம்பர் மாதம் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், அனுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் ஐந்தாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
அவர் ஏற்கனவே இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.