மேலும்

மாதம்: December 2019

குத்துக்கரணம் அடித்த வெள்ளை வான் சாட்சிகள் – ராஜிதவுக்கு எதிராக வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியதன் படியே, வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நான்கு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு செல்லவுள்ளார் என, புதுடெல்லியில் இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த இந்திய தூதுவர்

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை, கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அரசியல் வாழ்வை கெடுக்க முயற்சி – மகாநாயக்கர்களிடம் முறையிட்ட சம்பிக்க

தனது அரசியல் வாழ்க்கையை கெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் சம்பிக்க ரணவக்க முறையிட்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்கவுக்கு விளக்கமறியல்

கொழும்பு குற்றப் பிரிவு காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோத்தா அரசாங்கத்தில் மேலும் இரு முன்னாள் படை அதிகாரிகள்

கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் மேலும் இரண்டு முன்னாள் படை அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டின் இறைமை, சட்டத்தை சுவிஸ் மதிக்க வேண்டும் – சிறிலங்கா அரசு

சிறிலங்காவின் சட்டம் மற்றும் இறையாண்மையை மதிக்குமாறு சுவிஸ் அதிகாரிகளிடம் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பல சுவிஸ் தூதரக அதிகாரிகளை கைது செய்ய திட்டம்?

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்துடன், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.