மேலும்

நாள்: 17th December 2019

சிறிலங்காவின் நடவடிக்கை – சுவிஸ் அதிருப்தி, எச்சரிக்கை

சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளரான கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் அல்லது சிரியலதா பெரேரா கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களை, சுவிஸ் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அதிபர்

தேசியப் பிரச்சினைக்கு எந்தவொரு சூழலிலும், சமஷ்டித் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து வராது – கோத்தா உறுதி

தமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச  நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு மீண்டும் உறுதியளித்தார்.

வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸ்? – சிறிலங்கா அதிபர் வெளியிட்ட தகவல்

வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

19 நீக்கம், நாடாளுமன்ற கலைப்பு, மாகாண சபை தேர்தல் –  கோத்தாவின் பதில்கள்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிச்சயமாக மாற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தீங்கிழைக்கும் நோக்கம் இல்லை – கோத்தாவிடம் கூறிய சுவிஸ் தூதுவர்

சிறிலங்காவுக்கு தீங்கிழைக்கும் நோக்கம் எதுவும் கிடையாது என்று சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்தார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எம்சிசி உடன்பாட்டை ஆராய விரைவில் குழு நியமனம்

எம்.சி.சி உடன்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக  ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘கடத்தல் நடக்கவேயில்லை – நான் தான் பலிக்கடாவாகி விட்டேன்’

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

சுவிஸ் தூதுரக பணியாளருக்கு விளக்கமறியல் – நீதிமன்றில் நடந்தது என்ன?

குற்ற விசாரணைத் திணைக்களத்தில் திரிபுபடுத்திய சாட்சியம் அளித்தார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட தூதரக பணியாளரான கார்னியர் பனிஸ்டர் பிரான்சிசை, எதிர்வரும் 30ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.