மேலும்

நாள்: 20th December 2019

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வழங்கப்படாது மத்தல விமான நிலையம்

மத்தல விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தூதரக பணியாளரின் மனநல அறிக்கை இன்று நீதிமன்றில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸின் மனநிலை குறித்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று  தேசிய மனநல நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர்  தெரிவித்தார்.

கோத்தா கொலை முயற்சி வழக்கு – அரசியல் கைதிக்கு 14 ஆண்டுகளின் பின் விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்வைக் கொலை செய்ய முயன்றார்  என்ற  குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ்  அரசியல் கைதி ஒருவர், நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

கடத்தல் குற்றச்சாட்டுடன் சுவிஸ் தூதரகத்துக்கு தொடர்பு இல்லை – கோத்தா

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் தூதரக பணியாளர் கூறிய குற்றச்சாட்டுடன், கொழும்பில் சுவிஸ் தூதரகம் தொடர்புபட்டிருக்கவில்லை  என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மார்ச் 3ஆம் நாள் நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 மார்ச் 3ஆம் நாளுக்குப் பின்னர் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா அமர்வுக்குத் தயாராகும் சிறிலங்கா அரசாங்கம்

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  மார்ச் மாத அமர்வின் போது  அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மீளாய்வு செய்து வருகிறது.

சம்பிக்க கைது – அரசியல் பழிவாங்கல் அல்ல

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க  கைது செய்யப்பட்டுள்ளதில்,  எந்த அரசியலும் இல்லை என்றும், காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த  ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே,  அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், எடுக்கப்படுவதாகவும், சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.