மேலும்

நாள்: 18th December 2019

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோத்தா அரசாங்கத்தில் மேலும் இரு முன்னாள் படை அதிகாரிகள்

கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் மேலும் இரண்டு முன்னாள் படை அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டின் இறைமை, சட்டத்தை சுவிஸ் மதிக்க வேண்டும் – சிறிலங்கா அரசு

சிறிலங்காவின் சட்டம் மற்றும் இறையாண்மையை மதிக்குமாறு சுவிஸ் அதிகாரிகளிடம் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பல சுவிஸ் தூதரக அதிகாரிகளை கைது செய்ய திட்டம்?

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்துடன், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சுவிஸ் அறிக்கைக்கு விரைவில் பதிலடி

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து. சுவிஸ் வெளிவிவகார சமஷ்டி திணைக்களம் வெளியிட்ட அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைவில் பதில் அளிக்கையை வெளியிடவுள்ளது.

சிறிலங்காவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

அடுத்து வரும் விடுமுறைக் காலத்தில் சிறிலங்காவில் ‘தீவிரவாதிகள் சிறியளவிலான  அல்லது எச்சரிக்கை இல்லாத தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று . கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்கு தடை

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடிக் குவளைளகளில் குடிநீர் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுவிஸ் அறிக்கை சிறிலங்காவுக்கு அவமானம் – பாலித ரங்கே பண்டார

தமது தூதரகப் பணியாளர் கடத்திச் செல்லப்பட்டதாக  கூறப்படும் சம்பவம் குறித்து, சிறிலங்கா நடத்திய விசாரணையில் திருப்தி அடையவில்லை என்ற சுவிஸ் அறிக்கை, சிறிலங்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் . பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது – ஓமல்பே சோபித தேரர்

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் தக்ஷிண லங்கா பிரதம சங்க நாயக்கர் வண. ஓமல்பே சோபித தேரர்.