மேலும்

நாள்: 19th December 2019

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன் பிணை கோரி ராஜித மனு

தம்மைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சம்பிக்க ரணவக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

வீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, சாரதியின் மீது பழி போட்டு விட்டுத் தப்பிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் ஆரம்பம் –  அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட சம்பவம்,  புதிய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உரிய நடைமுறைகளையே பின்பற்றுகிறோம் – சுவிசிடம் கூறிய சிறிலங்கா

சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான விசாரணைகள் விடயத்தில், இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க, ஒவ்வொரு கட்டத்திலும் உரிய செயல்முறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என, சுவிஸ் வெளிவிவகார அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டமுறைகளுக்கு மாறாக நடந்த கைது

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குத்துக்கரணம் அடித்த வெள்ளை வான் சாட்சிகள் – ராஜிதவுக்கு எதிராக வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியதன் படியே, வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நான்கு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு செல்லவுள்ளார் என, புதுடெல்லியில் இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த இந்திய தூதுவர்

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை, கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அரசியல் வாழ்வை கெடுக்க முயற்சி – மகாநாயக்கர்களிடம் முறையிட்ட சம்பிக்க

தனது அரசியல் வாழ்க்கையை கெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் சம்பிக்க ரணவக்க முறையிட்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்கவுக்கு விளக்கமறியல்

கொழும்பு குற்றப் பிரிவு காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.