மேலும்

மாதம்: October 2019

விசுவமடு கூட்டு பாலியல் வல்லுறவு – 3 சிறிலங்கா படையினரும் விடுதலை

விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று சிறிலங்கா இராணுவத்தினரை, சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து அவர்களை விடுதலை செய்துள்ளது.

சிறிலங்காவுக்கான புதிய தூதுவரின் நியமனத்தை ரத்து செய்தது பாகிஸ்தான்

சிறிலங்காவுக்கான தூதுவராக அனுப்பப்படவிருந்த முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனத்தை பாகிஸ்தான் அரசாங்கம் ரத்துச் செய்திருக்கிறது.

எல்பிட்டிய தேர்தல் – இரவு 10 மணிக்குள் முடிவு

காலி மாவட்டத்தில் உள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் – படங்கள்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் அடுத்தவாரம் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைப் பேரணி நேற்று கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுன – சுதந்திரக் கட்சி புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்து

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இன்று முற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியை அழிக்க எடுத்த முடிவு – குமார வெல்கம

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவு, சுதந்திரக் கட்சியை அழித்து விடும் என்று எச்சரித்துள்ளார் அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.

நாளை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் யாழ். அனைத்துலக விமான நிலையம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாவுக்கு ஆதரவா? – மறுக்கிறது இதொகா

அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர அறிவித்தது அடிப்படையற்றது என்று இதொகா அறிவித்துள்ளது.