மேலும்

மாதம்: October 2019

அங்குமிங்கும் தாவும் அரசியல்வாதிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல்வாதிகள் அணி மாறுவதும், கட்சி தாவுவதும், தீவிரமடைந்துள்ளது.

விரைவில் கோத்தாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் சிறையிலுள்ள படையினரை விடுவிப்பேன் – கோத்தா வாக்குறுதி

தாம் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் வேலையாக, தற்போதைய அரசாங்கத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து படையினரையும் விடுதலை செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச.

கோத்தாவுக்கு ஆதரவு – சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இதொகாவும் கோத்தாவுக்கு ஆதரவு – மகிந்த அமரவீர

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரும் அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்க மைத்திரி முடிவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தல் முடியும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கவும், அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவும் முடிவு செய்துள்ளார்.

கூட்டமைப்பின் ஆதரவு பெற்றவரை சுதந்திரக் கட்சி ஆதரிக்காது – திலங்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொலை அச்சுறுத்தல் – சிஐடியில் முறைப்பாடு

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அனுராதபுரவில் இன்று பரப்புரையை ஆரம்பிக்கிறார் கோத்தா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரையை இன்று அனுராதபுரவில் ஆரம்பிக்கவுள்ளார்.

இன்று முடிவை அறிவிப்பார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான இறுதியான முடிவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று காலை அறிவிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.